குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பலர் வாழ்த்து
பெரம்பலூர் மாவட்டம் குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர்.;
Update: 2024-06-21 09:08 GMT
பெரம்பலூர் மாவட்டம் குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்திய இளைஞர் (ம) விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் ஜம்மு காஷ்மீரில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி அண்மையில் நடை நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டம் சர்க்கரை ஆலை எறையூர் நேரு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சாய்நிவேஷ், ஹரிகிருஷ்ணன் மற்றும் உண்டு உறைவிட பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் வெங்கடேசன் ஆகிய 3 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வெற்றிபெற்று அசத்தியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மெடல், சான்றிதழ் வழங்கப்பட்டது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.