வ.உ. சி பேரவை சார்பில் 1008 பால்குடங்கள் எடுத்து வழிபாடு

பழனியில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வ.உ. சி பேரவை சார்பில் 1008 பால்குடங்கள் எடுத்து, அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்யப்பட்டது.

Update: 2024-03-05 10:09 GMT

வ.உ. சி பேரவை 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் உபகோவிலான அருள்மிகு மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா துவங்கி நடைபெற்று நிறைவடைந்தது. மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பழனி வ.உ.சி பேரவை சார்பில் மாரியம்மனுக்கு 1008 பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக சென்று மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அன்னாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சித்தனாதன் சன்ஸ் பழனிவேல், விஜயகுமார், கார்த்திக், பழனி நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, திமுக செயலாளர் வேலுமணி, அதிமுக நகர செயலாளர் முருகானந்தம் உட்பட நகரின் முக்கிய பிரமுகர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News