மாசி அமாவாசை சிறப்பு தரிசனம்

பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மாசி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-03-11 01:42 GMT

மாசி அமாவாசை சிறப்பு பூஜை

 பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும் இங்கு வெளியூர், மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று மாசி மாத அமாவாசை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நாளில் மாசாணி அம்மன் கோவிலில் குவிந்தனர்.

கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News