அழகர் கோவில் ஸ்ரீ கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெற்ற மாசி தெப்பத் திருவிழா கோலாகலம்
அழகர் கோவில் ஸ்ரீ கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெற்ற மாசி தெப்பத் திருவிழா கோலாகலம்
Update: 2024-02-25 06:05 GMT
மேலூர் அருகே அழகர்கோவில் ஶ்ரீ கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெற்ற மாசி தெப்ப திருவிழா: தெப்பத்தில் தண்ணீர் இல்லாத நிலையில், "நிலை தெப்பமாக" தெப்பத்தை சுற்றி வெளிப்புறத்தில் சப்பரத்தில் சுற்றி வரப்பட்ட கள்ளழகரை, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கோவிந்தா கோஷத்துடன் சுவாமி தரிசனம். மதுரை மாவட்டம் மேலூர் அருகே 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும், உலக பிரசித்தி பெற்றதுமான அழகர்கோவில் ஶ்ரீ கள்ளழகர் திருக்கோவில் மாசி மாத தெப்ப திருவிழா கடந்த 22ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையொட்டி, நேற்று கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி திருக்கோவிலில் நடைபெற்றது, இதில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்த நிகழ்வு நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று காலை ஶ்ரீ தேவி, மற்றும் பூதேவியருடன் சமேதராக கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி, தீவட்டி பரிவாரங்களுடன் அழகர்கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொய்கைக்கரைப்பட்டியில் உள்ள மாண்டூக தீர்த்தம் என்ற புஸ்பகரணி தீர்த்த தெப்பத்தில் எழுந்தருள்வதற்காக புறப்பாடாகி சென்றார். அப்போது வழி நெடுகிலும் பொதுமக்கள் நின்று ஏராளமான மக்கள் மாலை அணிவித்து தீபாராதனை செய்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து, புஸ்பகரனி தீர்த்த தெப்பத்தில் மழையின்னை காரணமாக போதிய தண்ணீர் இல்லாததால், கள்ளழகர் என்று அழைக்ககூடிய சுந்தராஜ பெருமாள் ஶ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் சமேதராக சப்பரத்தில் தெப்பத்தை சுற்றி "நிலை தெப்பபமாக" வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது தெப்பத்தின் கரைகளில் கூடியிருந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இந்திருவிழாவையொட்டி, திருக்கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் கலைவாணன் மற்றும் கண்காணிப்பாளர் பிரதீபா தலைமையில் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் .