நாமக்கல் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

நாமக்கல் காளியம்மன் கோவிலில் மாசி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Update: 2024-02-16 16:09 GMT

மாசி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல்லில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காளியம்மன்.

நாமக்கல் காளியம்மன் கோவிலில் மாசி முதல் வெள்ளி சிறப்பு வழிபாடு நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள கொண்டிச்சட்டிப்பட்டி புகழ்பெற்ற ஸ்ரீ காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News