மாசிப் திருவிழா- 20,000 பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன்

நத்தம் மாரியம்மன் கோயிலில் நடந்த மாசிப் பெருந்திருவிழாவில் சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்க்கிடன் செலுத்தினர்.

Update: 2024-02-28 06:07 GMT

பூக்குழி இறங்கிய பக்தர்கள் 

திண்டுக்கல் மாவடட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் உள்ள கோயில்களில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயில் ஆண்டு தோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் மாசிப் பெருந்திருவிழா சிறப்புற்றதாகும். இந்த ஆண்டு இந்த திருவிழா கடந்த பிப் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி செவ்வாய்க்கிழமை முக்கிய விழாவான பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அதிகாலை முதல் அலகு குத்தியும் அக்கினி சட்டி எடுத்தும், பறவைக் காவடி , பால்குடம் எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து கோயில் பூசாரிகள் பூக்குழி இறங்கியதை தொடர்ந்து பத்தர்கள் ஒருவர் பின் ஒருவராகவும், குழந்தைகளை தூக்கி கொண்டும் பூக்குழியில் இறங்கினர். இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்தர்கள் பூக்குழி இறங்கினர்.
Tags:    

Similar News