மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
சேலம் அருகே மின்சாரம் தாக்கியதில் கொத்தனார் உயிரிழந்தார்.
Update: 2024-01-22 16:31 GMT
சேலம் கோரிமேடு கோம்பை ப்பட்டி கார்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது37). கொத்தனார். இவர் இன்று காலை 7 மணி அளவில் தனது வீட்டுக்கு எதிரில் புதிதாக கட்டி வரும் கட்டிடத்திற்கு தண்ணீர் விடுவதற்காக அங்கிருந்த மின்மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி நாராயணன் தூக்கி வீசப்பட்டார். இவரது மனைவி மணிமேகலை சம்பவ இடத்திற்கு ஓடி வந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நாராயணனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.