பா.ஜ.க அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் தோழமைக் கட்சிகள் 13 கட்சிகள் இணைந்து மாநில உரிமைகள் காத்திட பா.ஜ.க கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Update: 2024-02-08 05:59 GMT
தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் தோழமைக் கட்சிகள் என 13 கட்சிகள் இணைந்து மாநில உரிமைகள் காத்திட மத்தியில் ஆளும் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகிகள் என நூற்றுக்கணக்கான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.பாஜக அரசை புறக்கணித்து திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என கூட்டத்தில் வலியூறுத்தப்பட்டது.