மயான கொள்ளை திருவிழா

வாணியம்பாடியில் நடைப்பெற்ற மயான கொள்ளை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-03-11 09:27 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைப்பெற்ற 250 ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழாஏராளமான பக்தர்கள் பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம்.. வாணியம்பாடி அடுத்த அம்பூர்பேட்டை பகுதியில் 250 ஆம் ஆண்டு ஸ்ரீ அங்காளம்மன் கோவில் மகா சிவராத்திரி திருவிழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது

, அதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயான கொள்ளை நிகழ்வு இன்று வாணியம்பாடி பாலாற்றில் நடைப்பெற்றது, விழாவிற்கு முன்னதாக பாலாற்றில் அசுரன் உருவம் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டிருந்தது.. இதனை தொடர்ந்து அங்காளம்மன் கரக வடிவில் மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா வந்து பாலாற்றில் அசுரனை வதம் செய்யும் நிகழ்வு வெகவிமர்சையாக நடைப்பெற்றது.. மேலும் இந்த மயான கொள்ளையை காண வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News