வாக்கு சேகரிக்கும் பணியில் அதிமுக தீவிரம்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிக்கும் பணியை துவங்கினார்

Update: 2024-03-29 03:49 GMT

வாக்கு சேகரிப்பு 

மயிலாடுதுறை மாவட்டத்தில் காங்கிரஸ் அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு கட்சியினர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 25 ஆம் தேதி அதிமுக வேட்பாளர் பாபு வேட்பு மனு தாக்கல் செய்து கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரிக்கும் பணியினை இரவு அதிமுக வேட்பாளர் பாபு துவங்கினார்.

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் சித்தி விநாயகர் ஆலயத்தில் திறந்த வாகனத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து விநாயகரை வழிபட்டு அதிமுக வேட்பாளர் பாபு அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், தேமுதிக மாவட்ட செயலாளர் ஜலபதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஒன்றிய செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மயிலாடுதுறை நகரில் பட்டமங்கல தெரு, பழைய ஸ்டேட் பேங்க் ரோடு, பேருந்து நிலையம், மருத்துவமனை சாலை, திருஇந்தளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் புடை சூழ இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Tags:    

Similar News