நல்ல நாயகி அம்மன் ஆலயத்தில் சண்டி ஹோமம்

மயிலாடுதுறை அருகே மணக்குடி நல்லநாயகி அம்மன், பொறையான் கோவிலில் நடந்த சண்டி ஹோமத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-03-19 01:32 GMT

புனித நீர் ஊர்வலம் 

மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் நல்லநாயகி அம்மன் சமேத பொறையான்கோவிலில் பங்குனி உற்சவ நிகழ்ச்சிகளில் ஒன்றான ஆறாம் ஆண்டு மகா சண்டி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. உலக நன்மை வேண்டி நடைபெற்ற இந்த சிறப்பு ஹோமத்தில் தருமபுரம் ஆதீனக் கட்டளை சிவகுருநாத தம்பிரான் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் யாகம் வளர்க்கப்பட்டது. யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு. நல்லநாயகி அம்மன், பொறையான் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News