தருமபுரம் ஆதீனம் மிரட்டல் வழக்கில் விஜயகுமார் விடுவிப்பு

தருமபுரம் ஆதீனத்தை ஆபாச வீடியோ காட்டி பணம் பறிக்க முயன்ற கும்பல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.;

Update: 2024-02-29 11:21 GMT

தருமபுரம் ஆதீனம் புகார் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விஜயகுமார்

மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டுவதாக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தருமபுரம் ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி புகார் அளித்திருந்தார்.உ

புகாரில் உள்ள 9 நபர்களில் திருக்கடையூர் விஜயகுமார் என்ற பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. புகாரில் குறிப்பிட்ட விஜயகுமார் செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய திமுகழக செயலாளராக பணியாற்றி வருகிறார். இதுகுறித்து இன்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

Advertisement

அதில் தருமபுரம் ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதம் ஒன்றை பத்திரிகையாளருக்கு அளித்தனர்.   அதில் இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்த தருமபுரம் ஆதீனத்தின் சகோதரரும் உதவியாளருமான விருத்தகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அளித்த கடிதத்தில் தான் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளேன்.

மேலும் திருக்கடையூர் விஜயகுமார் என்பவர் இந்த பிரச்சனை விவகாரத்தில் தனக்கு உறுதுணையாக இருந்து உதவி செய்தார், என்றும் என்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய நபர்களிடமிருந்து விஜயகுமார் பேசி பிரச்சினையை சமூகமாக தீர்த்துக் கொள்ள முயற்சி எடுத்தபோது பலனளிக்காததால் காவல்துறையின் உதவியை நாடுமாறு திருக்கடையூர் விஜயகுமார் அறிவுரையின்பேரில் காவல்துறையின் உதவியை நாடினேன் என்றும் எங்களுக்கு உதவி செய்ததை தவிர விஜயகுமாருக்கு இந்த வழக்கில் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News