மழை வேண்டி 235 பொருட்கள் நவசண்டி யாகத்தில் தீயிடப்பட்டது
மயிலாடுதுறை அருகே மேலமருதாந்தநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அஷ்டாதசபுஜ மகாலெக்ஷ்மி துர்கா பரமேஸ்வரி கோயிலில் மழை வேண்டி மகா நவசண்டி யாகம் நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-12 12:32 GMT
மயிலாடுதுறை அருகே மேலமருதாந்தநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அஷ்டாதசபுஜ மகாலெக்ஷ்மி துர்கா பரமேஸ்வரி கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் 4-ஆம் ஆண்டு மகா நவசண்டி யாகம் இன்று நடைபெற்றது. இதையடுத்து, கோயிலின் முன்பு மிகப்பெரிய யாககுண்டம் அமைக்கப்பட்டு, யாகவேள்வி நடைபெற்றது. இதில், தங்கத்தாலி, வெள்ளி கொலுசு, வெள்ளி மெட்டி, 13 நிறப்பட்டுப்புடவைகள், நவ தானியங்கள், பாதாம், பிஸ்தா, முந்திரி, நிலக்கடலை உள்ளிட்ட அனைத்து வகை பருப்புகள் மற்றும் 235 மருந்துப்பொருட்களை தீயில்; இட்டு வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து, மகா பூர்ணாகுதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மழை பெய்ய வேண்டி வழிபாடு நடத்தினர்.