வைகாசி விசாகம் - பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலா

மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட ஓலைசப்பரத்திலும் வெள்ளிரதத்திலும் எழுந்தருளி நடைபெற்ற திருவீதியுலாவில் பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாரதனை எடுத்து வழிபாடு செய்தனர்.

Update: 2024-05-19 07:57 GMT

திருவீதி உலா 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோவில் உள்ளது. ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்த இவ்வாலயத்தில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. 5 ஆம் திருநாளான நேற்று  பஞ்சமூர்த்திகள் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட ஓலைசப்பரத்திலும் வெள்ளிரதத்திலும் வீதியுலா காட்சி நடைபெற்றது.

ஶ்ரீ அபயாம்பிகை சமேத ஶ்ரீ மாயூரநாதர் வெள்ளி ரிஷப வாகனங்களில் தனிதனியாக இரண்டு ஓலைசப்பரங்களில் எழுந்தருளினர். வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், விநாயகர் சண்டிகேஸ்வரர் மின்னோளியால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் எழுந்தருள செய்யப்பட்டனர். தொடர்ந்து மகாதீபாரதனை செய்யப்பட்டு சிதறுதேங்காய் உடைக்கப்பட்டு திருவீதியுலா காட்சி நடைபெற்றது. மேளதாள வாத்தியங்கள் சிவ கைலாய வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற பஞ்சமூர்திகளின் வீதியலாவில் பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.

Tags:    

Similar News