புதிய பாலம், வகுப்பறைகள் கட்டும் பணியை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

ரூ.2.16 கோடியில் புதிய பாலம், வகுப்பறைகள் கட்டும் பணியை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

Update: 2023-12-08 05:45 GMT

ரூ.2.16 கோடியில் புதிய பாலம், வகுப்பறைகள் கட்டும் பணியை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் 15-வது வார்டுக்கு உட்பட்ட மத்திய சிறைச்சாலை பின்புறம் வரட்டாறு கால்வாயின் குறுக்கே ரூ.96 லட்சத்தில் அய்யர் தோட்டம் செல்லும் புதிய இணைப்பு பாலம் அமைப்பதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சின்னகொல்லப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.35 லட்சத்தில் புதிதாக 2 கூடுதல் வகுப்பறைகள், சூரமங்கலம் மண்டலம் 1-வது வார்டு காமிநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.85 லட்சத்தில் புதிதாக 6 வகுப்பறைகள் என மொத்தம் ரூ.2 கோடியே 16 லட்சத்தில் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அஸ்தம்பட்டி மண்டலக்குழுத்தலைவர் உமாராணி, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கமலநாதன், நியமனக்குழு உறுப்பினர் தமிழரசன், செயற்பொறியாளர்கள் திலகா, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News