குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் : மேயர் வேண்டுகோள்

கோடைகாலத்தை உணா்ந்து பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Update: 2024-05-08 17:28 GMT

மேயர்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ராஜாஜி பூங்கா நீர்தேக்கம், விவிடி நீர்தேக்கம், சுப்பையா பூங்கா நீா்தேக்கம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கக்கூடிய மேல்நிலை குடிநீர் ஏற்று நிலையங்களுக்கு வரும் நீரின் அளவு மற்றும் பராமாிப்பு பணிகளையும் மாநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் அளவினை மேயர் ஜெகன் பொியசாமி பார்வையிட்டார்

பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் "தாமிரபரணி ஆற்றிலிருந்து மாநகர மக்களுக்கு குடிதண்ணீர் குழாய் மூலம் கொண்டுவரப்பட்டு பல்வேறு பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்தில் ஏற்றப்பட்டு பின்னர் அப்பகுதிக்குட்பட்ட பொதுமக்களுக்கு குடிதண்ணீர் முறையாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடைகாலம் ஆரம்பமாகி இருப்பதால் ஓவ்வொரு ஆண்டும் தண்ணீர் தேவையும் அதிகமாகும் இருப்பினும் மக்கள் நலன் கருதி குடிதண்ணீர் தட்டுபாடின்றி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கோடைகாலத்தை சமாளித்து அனைவருக்கும் தட்டுபாடின்றி குடிதண்ணீர் வழங்க வேண்டிய கடமையும் மாநகராட்சிக்கு உள்ளது. என்பதை உணா்ந்து செயல்படும் வகையில் பணியாற்றி வரும் வேலையில் பொதுமக்களும் குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியோடு ஓத்துழைத்து கோடை காலத்தை கடக்கும் வரை நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

எல்லோர் நலனும் முக்கியம் என்ற அடிப்படையில் பணியாற்றி வருகின்றோம் என்று கூறினார். வட்ட செயலாளர் ரவீந்திரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் கனகராஜ், அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், வட்ட பிரதிநிதி துரை மற்றும் பிரபாகர், ஜோஸ்பர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News