அரசு பள்ளியில் இயந்திரவியல் கண்காட்சி !
புளியம்பட்டி பள்ளியில் இயந்திரவியல் கண்காட்சி நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-08 06:51 GMT
இயந்திரவியல் கண்காட்சி
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எந்திரவியல் கண்காட்சி பிரைட் அகாடமி நிறுவன மாணவர்களால் நடத்தப்பட்டது. கடலில் எல்லையைத் தாண்டி மீனவர்கள் செல்லும் பொழுது அவர்களை எச்சரிக்கும் ஒலி எழுப்பும் கருவி, பகலில் சூரிய வெளிச்சம் வந்தால் வீட்டில் விளக்குகள் தானாக அணையும் கருவி போன்றவை இடம் பெற்றன. இதில் தலைமை ஆசிரியர் விஜய் ஆரோக்கிய மேரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.