ராமநாதபுரம்: மருத்துவ முகாம்
ராமநாதபுரத்தில் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக மருத்துவ சேவை அணி, சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.;
மருத்துவ முகாம்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் தமுமுக மருத்துவ சேவை அணி சார்பில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து பொது இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் சிறப்பு அழைப்பாளராக மக்கள் உரிமை, நுகர்வோர் பாதுகாப்பு அணி மாநில செயலாளர் வழக்கறிஞர் தீன்முகமது, திருத்துறைப்பூண்டி நகர பொருளாளர் முகமது யூசுப், மண்டபம் பேரூர் சேர்மன் ராஜா, நகர் திமுக பூவேந்திரன் எம்.சி நகர் திமுக முருகானந்தம் எம்.சி அதிமுக மாவட்ட பேச்சாளர் மைதீன், மீனவர் சங்க தலைவர் ஜாகிர் உசேன், பாரம்பரியம் விசைப்படகு தலைவர் பக்கர், மற்றும் மத்திய மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர் நிர்வாகிகள், கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மண்டபம் பேரூர் தலைவர் சாகுல் ஹமீது சிறப்பாக செய்து இருந்தனர்.