அபெக்ஸ் சங்கம் சார்பில் ஜி.ஹெச்.க்கு மருத்துவ உபகரணம்
குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் ஜி.ஹெச்.க்கு மருத்துவ உபகரணம் வழங்கப்பட்டது.;
Update: 2024-01-04 07:11 GMT
மருத்துவ உபகரணம் வழங்கல்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் இதய நோய், பல், பெண்கள் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், ரத்த தானம் உள்ளிட்ட பல மருத்துவ முகாம்கள், கல்வி உதவிகள், கலிக்கம் எனும் சித்த மருத்துவ முகாம் ஆகியன நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடந்து வரும் அபெக்ஸ் வார விழாவின் ஒரு கட்டமாக குமாரபாளையம் ஜி.ஹெச் மருத்துவர்கள் கேட்டுகொண்டதிற்கிணங்க, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நுரையீரலில் இருந்து சளி எடுக்கும் இயந்திரம் வழங்கும் விழா தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. இந்த இயந்திரம் தலைமை டாக்டர் பாரதி வசம் வழங்கப்பட்டது. முன்னாள் சர்வேதேச தலைவர் ஈஸ்வர், முன்னாள் தலைவர்கள் புருஷோத்தமன், சந்திரன், பன்னீர்செல்வம், தவமணி, தனசேகரன், வெங்கடேஷ், கதிர்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.