அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவை - பாஜக வேட்பாளர் உறுதி

பளுகல் பகுதியில் விளவங்கோடு பாஜக வேட்பாளர் நந்தினி தீவிர தேர்தல் பிரச்சாரம். அனைத்து மக்களுக்கும் மருத்துவ சேவை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி.

Update: 2024-04-16 06:30 GMT

வாக்கு சேகரிப்பு 

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக நந்தினி போட்டி இடுகிறார். ஒவ்வொரு நாளும் பல் வேறு பகுதிகளில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.பளுகல் பகுதியில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அச்சாளிபுரம் சிவசக்தி கிராம மேம் பாட்டு மன்ற நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது, மக்கள் குறைகள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்து விவாதித்தனர். விளவங்கோடு தொகுதியில் மக்களுக்கு தர மான மருத்துவ சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.அரசின் தரமான மருத்துவ சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த வேட்பாளர், இடைக்கோடு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி அரசு ஆஸ்பத்திரியாக மாற்றவும், அருமனை அரசு மருத்துவமனை மற்றும் பத்துகாணி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி முழு நேரமும் மருத்துவ சேவை கிடைக்க வழிவகை செய்வேன் என உறுதி அளித்தார்.
Tags:    

Similar News