கண்டெய்னர் லாரி மீது கார் மோதி மருத்துவ மாணவன் பலி
சங்ககிரி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் மருத்துவ மாணவன் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-09 14:30 GMT
பலியான மருத்துவ மாணவர்
சங்ககிரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணகுமாரின் மகன் கீர்த்திக்குமார் (23). இவர் கோவை ESI மருத்துவ கல்லூரியில் 4ம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் சேலத்திலிருந்து சங்ககிரி நோக்கி ஆவரங்கம்பாளையம் அருகே காரில் சென்றுக்கொண்டிருந்த போது சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த சங்ககிரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர். வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.