மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
கரை பசுபதிபாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்தநிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.;
கரை பசுபதிபாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்தநிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.
கரை பசுபதிபாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, நஞ்சை காளக்குறிச்சி அருகே உள்ள கரை பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ராஜேஷ் குமார் வயது 30. கடந்த பத்து வருடங்களாக ராஜேஷ் குமார், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.
இதனால் விரக்தி அடைந்த மன நிலையில் வாழ்ந்து வந்த ராஜேஷ்குமார், ஜூன் 11ஆம் தேதி மாலை 6 மணி அளவில், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த ராஜேஷ்குமாரின் தந்தை முருகேசன், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ராஜேஷ்குமாரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சின்ன தாராபுரம் காவல் துறையினர்.