மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மர்ம மரணம்
நெல்லையில் வீட்டில் இறந்த நிலையில் கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
Update: 2024-01-02 06:48 GMT
நெல்லை மாநகரம் செண்பகம் பிள்ளை மேலத்தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி.இவரின் மகள் ஜோதி முத்து. ஜோதி முத்து சற்று மனநலம் சரியில்லாதவர். இந்த நிலையில் முத்துலட்சுமி நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டில் ஜோதி முத்து இறந்து கிடந்துள்ளார்.இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் மனநிலை சரியில்லாத பெண் இறந்த கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.