மேட்டூர: 205 நாட்களுக்குப் பிறகு 50 அடிக்கு கீழ் சரிவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 205 நாட்களுக்குப் பிறகு 50 அடிக்கு கீழ் சரிந்துள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-17 17:16 GMT
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 101 அடியாக இருந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவ மழை கை கொடுக்காதது கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காமல் போனது உள்ளிட்ட காரணங்களால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.
இதனால் டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு கடந்தாண்டு அக்டோபர் 10 ஆம் தேதி நிறுத்தப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் குருவை, சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி பாதிக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 205 நாட்களுக்குப் பிறகு 50 அடிக்கு கீழ் குறைந்தது.