68 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்தது.மேலும் கர்நாடகா அணைகளில் இருந்தும் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் திறக்கவில்லை. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி முதல் மேட்டூர் அணையில் இரு ந்து டெல்டாவுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. குடிநீர் தேவை மேலும் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 மாதமாக பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் அணைக்கு வரும் நீர்வரத்தை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 297 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையில் வெளியே தெரிந்த புராதன சின்னங்கள் மூழ்கி வருகிறது.