மேட்டூரில் கொலை குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்
மேட்டூரில் குழந்தைகளை கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-14 12:49 GMT
தண்டனை விதிக்கப்பட்டது
சேலம் மாவட்டம். மேட்டூர் அருகே நங்கவள்ளி பகுதியை சேர்ந்த நெசவுத் தொழிலாளி கோபி(40). இவர் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு தூங்கிக் கொண்டிருந்த நிர்மல் (7), நிரஞ்சன் (7) ஆகிய இரண்டு குழந்தைகளையும் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்.
இது தொடர்பாக நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி தீபா குற்றம் சாட்டப்பட்ட நெசவுத் தொழிலாளி கோபிக்கு இரட்டை ஆயுள் தண்டனை, தலா 6000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனை அடுத்து குற்றவாளி கோபியை போலீசார் சிறையில் அடைத்தனர்.