குமரியில் எம் ஜி ஆர்  36ம் - ஆண்டு நினைவு நாள்.

தக்கலையில் ஓ பி எஸ் ஆதரவாளர் அணி சார்பில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-12-25 06:30 GMT
தக்கலை எம் ஜி ஆர் சிலைக்கு மாலை
அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம் ஜி ஆர் 36-ம்  நினைவு தினம் குமரி மவட்டம் தக்கலையில் அதிமுக ஓ பி எஸ் அணியினர் சார்பில் நடந்தது.   நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு  மாவட்ட செயலாளர் பி டி. செல்லப்பன்  தலைமையில் அதிமுக -வினர்   தக்கலை பகுதியில்  உள்ள எம் ஜி ஆர்  உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகி  உஷா,    ஒன்றிய செயலாளர்கள் முருகன், சிவகுமார், ராஜேஷ் மாவட்ட மகளிரணி செயலாளர் சுதா கோபால், தக்கலை நகரசெயலாளர் டேனியல், முன்னாள் மாவட்ட செயலாளர் டாக்டர் தங்கமணி, மாவட்ட தகவல் தொடர்பு அணி செயலாளர் ரெஞ்சன், பேருர் செயலாளர் டைட்டஸ் ராஜன் மற்றும் ஜபகர், ஜாண்ேறாஸ், லூக்காஸ்  உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News