தமிழச்சி தங்கபாண்டியனுக்கு புகழாரம் சூட்டிய துரைமுருகன்
தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது முதல் பாராளுமன்ற உரையிலேயே பாராளுமன்றத்தை அதிர வைத்தவர் என துரைமுருகன் புகழாரம் சூட்டினார்.
தென்சென்னை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் நீலாங்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தலைமை தாங்கி நடத்தி வைத்தனர். இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் மற்றும் பகுதி கழகச் செயலாளர் மதிவாணன், நிர்வாகிகள்,பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்..
அக்கூட்டத்தில் மேடையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எதிர்க்கட்சியினர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வந்த மறுகணமே திமுகவையும் அதன் தோழமைக் கட்சிகளையும் தரைமட்டம் ஆக்கி விடுவோம் என்றனர்., ஆனால் நம் தளபதியோ தேர்தலில் ஜெயித்து முதலமைச்சராக பிரமாணம் எடுக்கும் போது எனக்கு ஓட்டு போட்டவர்கள் மட்டுமல்ல எனக்கு ஓட்டு போடாதவர்களும் என்னை வாழ்த்து அளவிற்கு நடந்து கொள்வேன் என்றார்., அவர் கலைஞரின் மகன் அண்ணாவின் தம்பி அறிவாளி என பல்வேறு புகழாரங்கள் சூட்டியது மட்டுமின்றி திமுகவை தரைமட்டமாக்க நினைத்தால் அது ஒரு கணமும் நடக்காது என்றார்.
இஸ்லாமியர்களுக்கும் நமக்கும் இடையே ஒரு நல்ல உறவு இருக்கிறது. ஆனால் அதை உடைக்கும் விதத்தில் பலர் செயல்பட்டு வருகின்றனர். இஸ்லாமியர்களும், இலங்கை தமிழர்களும் ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்று கூறுகிறார்கள் ஆனால் சுதந்திர போராட்டத்தில் முதலில் குரல் கொடுத்தது ஒரு இஸ்லாமியர்தான். அதே போன்று செங்கோட்டையில் தேசியக்கொடியை நாட்டுவதற்கு தேசியக்கொடியை வடிவமைத்து கொடுத்தது ஒரு இஸ்லாமியர் தான் என்பதை என்றும் மறந்து விடாதீர்கள் டெல்லியின் கடைசி மன்னர் பகதுர்ஷா மற்றும் காயிதே மில்லத் என பல இஸ்லாமியர்கள் இந்திய சுதந்திரத்திற்காக போராடியுள்ளனர் என்பதை என்றும் நினைவில் கொள்ளுங்கள்.
"தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சொழநே மன்னாவதும் சோழ மண்டலமே" ஒரு மாவட்ட செயலாளர் என்றால் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மா.சுப்பிரமணியன் என புகழாரம் சூட்டினார். தென் சென்னை தமிழகத்திலேயே முதலிடம் பிடித்த நாடாளுமன்ற தொகுதியும், திமுக வெற்றி பெருவதற்கே பிறந்த தொகுதி தென்சென்னை தான்.என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக வேண்டும் என்றால் மிக முக்கியமான ஒன்று படித்திருக்க வேண்டும், ஹிந்தி அல்லது ஆங்கிலம் நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.. அந்த வகையில் பார்த்தால் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர் என்பதை அவரது முதல் பாராளுமன்ற உரையிலேயே தெரிந்து கொண்டேன். அந்த உரையை கேட்ட பாராளுமன்றமே அதிர்ந்தது.. என தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு புகழாரம் சூட்டினார்.