விருத்தாசலம் நகராட்சி பகுதிகளில் அமைச்சர் கணேசன் ஆய்வு
Update: 2023-12-05 01:16 GMT
அமைச்சர் ஆய்வு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தில்லை நகர், சிந்தாமணி நகர், ஆலடிரோடு, புதுப்பேட்டை பகுதிகளில் மழை நீரை வெளியேற்றும் பணிகள் மற்றும் மழையால் சேதமடைந்த சாலைகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வில் விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.