கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா : அமைச்சர் அறிக்கை!

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி காெண்டாடப்பட உள்ளது. 

Update: 2024-05-30 12:09 GMT

அமைச்சர் கீதா ஜீவன்

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி காெண்டாடப்பட உள்ளது.  இது தொடர்பாக திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில்'

"திருவாரூர் மாவட்டம், திருக்குவளை எனும் குக்கிராமத்தில் பிறந்து தன்னுடைய 14 வயது மாணவ பருவத்திலேயே இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி, அதன்பின் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா என தலைவர்களின் நன்மதிப்பை பெறும் வகையில் கடுமையாக உழைத்து, போராட்ட களத்திற்கு அஞ்சாத வீரனாக, சிறைத் தண்டனையைச் சிரித்த முகத்துடன் ஏற்கும் தீரானாக, படைப்பாற்றல் மிக்க இளந்தலைவராக, எந்நாளும் மக்களுடன் முத்துமிழறிஞர் கலைஞர் அவர்கள்.  இணைந்திருப்பவராகத் திகழ்ந்தவர் 1957 முதல் 2016 வரை 13 தேர்தல்களில் நின்று வென்று காட்டியவர். 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் அளப்பரிய திட்டங்கள், இந்தியாவுக்கே முன்னோடியான சாதனைகள், இந்திய அரசியலில் முக்கிய பங்காற்றி பல குடியரசு தலைவர்களையும், பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கத் துணை நின்ற அரசியல் ஆளுமை, இத்தனை திறமைகளும், இவ்வளவு சாதனைகளும் ஒருங்கே பெற்ற ஒரே தலைவர்நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவருடைய வழியிலேயே இந்த இயக்கத்தையும், தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக தமிழ்நாட்டில் சிறந்த ஆட்சியையும் நடத்தி வருபவர் தான் நம்முடைய கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். முத்துமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை 2023 ம் ஆண்டு ஜூன் 3 முதல் அந்த ஆண்டு முழுவதும் கொண்டாடிட வேண்டும் என்ற கழகத் தலைவரின் வேண்டுகோளை ஏற்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் ”ஊர்தோறும் கலைஞர்" என்றதலைப்பில் அனைத்து கிராமங்களிலும் கழகத்தின் இருவண்ணக்கொடிஏற்றப்பட்டது.

Tags:    

Similar News