மழையால் சேதமடைந்த பயிர்களை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வை
மழையால் சேதமடைந்த பயிர்களை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டு பயிர் சேதம் குறித்து கேட்டறிந்தார்.;
By : King 24x7 Website
Update: 2023-12-23 17:08 GMT
மழையால் சேதமடைந்த பயிர்களை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டு பயிர் சேதம் குறித்து கேட்டறிந்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, எம்.ரெட்டியபட்டி, நரிக்குடி ஆகிய வட்டாரங்களில் நெற்பயிர்கள் 23,02,14 ஹெக்டேர் பரப்பிலும், சிறுதானியங்கள் 53,06,21 ஹெக்டேர் பரப்பிலும், பயறு வகைகள் 5,637 ஹெக்டேர் பரப்பிலும், எண்ணெய் வித்துக்கள் 4,784 ஹெக்டேர் பரப்பிலும், பருத்தி 15,552 ஹெக்டேர் பரப்பிலும், கரும்பு 893 ஹெக்டேர் பரப்பிலும் ஆக மொத்தம் 1,03,701 ஹெக்டேர் பரப்பில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக, மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பயிர்சேதம் குறித்து, வேளாண்மைத்துறை மூலம் அனைத்து வட்டாரங்களிலும் உயர் அலுவலர்கள் தலைமையில் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், முடுக்கன்குளம் மற்றும் சிவலிங்கபுரம் பகுதிகளிலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் உலக்குடி பகுதிகளிலும் வேளாண்மைத்துறை சார்பாக, மழையால் சேதமடைந்த பயிர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பயிர் சேதம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். மேலும் நிவாரணத் தொகை வழங்குவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவசாயிகளிடம் தெரிவித்தார். மேலும் அந்தந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள பயிர் சேதம் குறித்து விரைந்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.