பழங்குடி கிராமங்களில் அமைச்சர் மனோ தங்கராஜ் வாக்கு சேகரிப்பு !

பேச்சிப்பாறை பழங்குடி கிராமங்களில் அவர்களுக்கு செய்யப்பட்டு வரும் திட்டங்களை விளக்கி கூறி கோரிக்கைகளை கேட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.

Update: 2024-04-11 06:13 GMT

மனோ தங்கராஜ் 

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பழங்குடி மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அமைச்சர் மனோ தங்கராஜ் ந காங்.வேட்பாளர் விஜய்வசந்திற்கு வாக்கு சேகரித்தார்.மக்களை நேரில் சந்தித்து, அரசு பழங்குடி மக்களுக்கு செய்துவரும் திட்டங்களை விளக்கியும், மக்களின் கோரிக் கைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகள் காணப்படும் என வாக்குறுதி அளித்தும் அமைச்சர் வாக்கு சேகரித்தார். அன்புநகர் பகுதியில் மக்களை சந்தித்த அமைச்சர், தேவைகள்குறித்து கேட்டறிந்தார். அரசு தரப்பில் மேற்கொள்ளதிட்டமிட்டுள்ள பணிகளை விளக்கிய அமைச்சர், தொடர்ந்து ஆதரவு தர வேண்டுமென கேட்டுக் கொண் டார். ஊராட்சி முன்னாள் தலைவர் ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags:    

Similar News