காங்கிரஸ் வேட்பாளருக்காக அமைச்சர் மெய்யநாதன் தீவிர பிரச்சாரம்
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அமைச்சர் மெய்யநாதன் மற்றும் திமுக பொறுப்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.
Update: 2024-04-12 02:24 GMT
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் சுதா மயிலாடுதுறை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எம்எல்ஏ நிவேதா முருகன், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார், மயிலாடுதுறை மத்திய ஒன்றிய கழக செயலாளர் இமயநாதன் ஆகியோருடன் வழக்கறிஞர் சுதா மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . காளி ஊராட்சியில் ஆரம்பித்து பாண்டூர் புத்தகரம் சுற்றுவட்ட கிராமங்கள் வழியாக நீடூர் கடைவீதியில் வாக்கு சேகரித்தார். தமிழக முதல்வரின் சாதனைகளை எடுத்துக் கூறியதுடன் ராகுல் காந்தியின் வேட்பாளர் ஆகிய எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என்றும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய கை சின்னத்தை மறவாதீர் என கேட்டுக்கொண்டார்.