வேலுநாச்சியாரின் சிலைக்கு அமைச்சர் மரியாதை
இராணி வேலுநாச்சியாரின் 294வது பிறந்தநாள் விழா - அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை;
Update: 2024-01-03 11:43 GMT
வேலுநாச்சியாரின் சிலைக்கு அமைச்சர் மரியாதை
தமிழக அரசு சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாரின் நினைவாக மணிமண்டபம் அமைத்துள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 3-ந் தேதி அவருடைய பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடிவருகிறது. இந்த ஆண்டு 294வது பிறந்த தினவிழாவையொட்டி சிவகங்கை தொண்டி சாலையில் அமைந்துள்ள ராணி வேலுநாச்சியாரின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவசிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தரியன், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.