திமுகஅலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர்
மரக்காணம் மத்திய ஒன்றிய திமுக அலுவலகத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-14 16:16 GMT
செஞ்சி மஸ்தான்
விழுப்புரம் வடக்கு மாவட்டம் மரக்காணம் மத்திய ஒன்றிய திமுக அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி பெருமுக்கல் ஊராட்சியில் நடைபெற்றது. இதற்கு மரக்காணம் மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மரக்காணம் ஒன்றிய குழுத்தலைவர் தயாளன், துணைத்தலைவர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு மரக்காணம் மத்திய ஒன்றிய திமுக அலுவலகத்தை திறந்து வைத்து முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி குத்து விளக்கினை ஏற்றி வைத்தார்.