குமரியில் நூலகத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட இளைஞர் அணி சார்பாக கலைஞர் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குமரி மாவட்டம் வந்தார். இன்று காலை பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேர்கிளம்பி பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட இளைஞர் அணி சார்பாக கலைஞர் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவரும்மாகிய ஜெகநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திமுக மாநில இளைஞரணி செயவாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி நூலகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பாரெகு, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ புஷ்பலீலாஆல்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.