திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.;
Update: 2024-03-30 07:30 GMT
உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் க. செல்வம் அவர்களுக்கு ஆதரவாக, மறைமலைநகர் பகுதியில் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி சார்பாக அமைச்சரும்,திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதசூதனன், காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ,செங்கல்பட்டு ,மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, நகர மன்ற தலைவர்கள், நகர செயலாளர், காட்டாங்குளத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் ,ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.