அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை குமரி வருகை  

கன்னியாகுமரி மக்களவை மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.;

Update: 2024-04-10 03:16 GMT

 அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய திமுக இளைஞரணி மாநில செயலாளரும்,  தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நாளை வியாழக்கிழமை குமரியில்  பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.      

Advertisement

 இதற்காக அவர் சென்னையில் இருந்து விமான மூலம் நாளை மாலை 4:30 மணிக்கு திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டத்திற்கு வருகிறார். மாலை 5. 30மணி அளவில் குழுத்துறையில் திறந்த வேனில் நின்றவாறு  வேட்பாளர்களை ஆதரித்து கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசுகிறார். பின்னர் அங்கிருந்து நாகர்கோவில் வேப்பமூடு,  பொன்னப்ப நாடார் திடலுக்கு வந்து மாலை 6:30 மணி அளவில் பேசுகிறார். 

அங்கிருந்து அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் நெல்லை மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்லுகிறார். இதற்கான ஏற்பாடுகளை குமரி மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான  தங்கராஜ் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News