பென்னிகுயிக் சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
பென்னிகுயிக் சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;
By : King 24x7 Website
Update: 2023-10-25 11:31 GMT
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தேனி மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு மற்றும் திமுக நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு தேனிக்கு வருகை தந்தார். இன்று காலை தேக்கடியில் இருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புறப்பட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னதாக தேனி மாவட்டம் லோயர்கேம்ப்-ல் உள்ள முல்லைப்பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் திருவுருவ வென்கலச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா மற்றும் எம்.எல்.ஏக்கள் கம்பம் - ராம், ஆண்டிபட்டி மகாராஜன் பெரியகுளம் சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.