திருப்பத்தூர் அருகே மினி வேன் மோதல்: கோயில் குருக்கள் பலி
திருப்பத்தூர் அருகே மினி வேன் மோதியதில் கோயில் குருக்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.;
விபத்து நடந்த இடம்
திருப்பத்தூர் கொரட்டி பகுதியை சார்ந்த காமகோட்டி மகன் வெங்கடேசன் இவர் கோயில் அர்ச்சராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மேலும் தற்போது கொரட்டி பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் குருக்களாக பூஜை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று அவரது வீட்டில் இருந்து ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து மீண்டும் திரும்பவும் வீட்டிற்கு செல்ல ஆதியூர் கூட்ரோடு அருகே வந்தார்.
அப்போது சேலம் வழியாக திருப்பத்தூர் செல்லும் சாலை வழியாக ஆதியூர் கூட்ரோடு பகுதியில் அப்போது நேர் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த வெங்கடேசன் குருக்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார்.
பின்னர் இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் வெங்கடேசன் குருக்களின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உறவினர் வீட்டிற்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய நிலையில் கோயில் குருக்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.