காணாமல் போன குழந்தை 4 மணி நேரத்தில் மீட்பு

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அரசு மாணவிகள் விடுதியில் தங்கியுள்ள சிறுமிகள் காணாமல் போன நான்கு மணி நேரத்திலேயே காவல்துறை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Update: 2024-03-11 11:12 GMT
குழந்தை மீட்பு

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோயில் அரசு மாணவிகள் விடுதியில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்துவரும் மூன்று சிறுமிகள் 09.03.2024 ஆம் தேதி மாலை 05.00 மணி முதல் காணவில்லை என்று மாணவிகள் விடுதி காப்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வெள்ளகோயில் காவல் நிலையத்தில் 09.03.2024 ஆம் தேதி இரவு 09.00 மணியளவில் Girl Missing வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காவல் கண்காணிப்பாளர் திருப்பூர் மாவட்டம், அவர்களின் உத்தரவு படி காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் விரைந்து செயல்பட்டு காணமல் போன மூன்று சிறுமிகள் பற்றி விசாரணை மேற்கொண்டதில் அந்த மூன்று சிறுமிகளின் ஒரு சிறுமியின் தோழி வீடான திண்டுக்கல்லுக்கு தோழியை பார்ப்பதற்காக சென்றிருப்பது தெரிந்து காவல் துறையினர் அங்கு சென்று 10.03.2024 ஆம் தேதி காலையில் அந்த மூன்று சிறுமிகளையும் விசாரித்து பத்திரமாக காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களின் பெற்றோர்களை வரவைத்து அவர்களின் முன்னிலையில் மாலை 4.00 மணியளவில் திருப்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல காப்பகத்தில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News