மாயமான மாணவி பக்கத்து வீட்டில் மயங்கிய நிலையில் மீட்பு
நாகர்கோவில் அருகே மாயமான மாணவி அருகில் உள்ள வாலிபர் வீட்டு குளியல் அறையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி நேற்று திடீரென மாயமானார். இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக சுற்றுவட்டார கிராமங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் தகவல் பரவி பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த பகுதி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் மாணவி நடமாடிய காட்சிகள் இருந்தன. இதில் அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவரின் வீட்டில் குளியல் அறையில் மாணவி மயங்கி கிடந்தது தெரிய வந்தது. இதை பார்த்தது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக மாணவியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வீட்டிலிருந்த 22 வாலிபரிடம் விசாரணை நடத்தினர். முதலில் அவர் ஏதும் தெரியாது என்று கூறினார். பின்னர் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் மாணவியுடன் தனக்கு பழக்கம் இருந்ததாகவும் அதன் பேரில் மாணவி வாலிபர் வீட்டுக்கு வந்ததாகவும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்ததால் குளியலறையில் மறைத்திருக்க கூடியதாகவும், வேற தவறு எதுவும் செய்யவில்லை என்று கூறினார். இதை அடுத்து இந்த பிரச்சனை நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்றது. அங்கு மகளிர் போலீசார் நடத்திய விசாரணையிலும் அந்த மாணவி சரியான பதில் கூறவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியை வாலிபர் குளியலறையில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.