எம்.எல்.ஏ பிறந்தநாள் - எம்.பி வாழ்த்து
நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கத்தின் பிறந்தநாளையொட்டி அவரை நேரில் சந்தித்து எம்.பி கே.ஆர்.என். ராஜேஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார்.;
Update: 2024-02-25 15:42 GMT
நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் எம்எல்ஏவின் இன்று பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்பி நாமக்கல்லில் உள்ள எம்எல்ஏ இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்வின் போது நாமக்கல் தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த் உடனிருந்தார். மேலும் இன்று நாமக்கல்லில் நடைபெற்ற திமுக கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ-வுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.