அதிமுக வேட்பாளரை ஆதரித்து எம்.எல்.ஏ பிரச்சாரம்
செட்டிகரை பொறியல் கல்லூரி அருகே அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார்.
Update: 2024-04-12 07:33 GMT
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் அசோகனை ஆதரித்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தர்மபுரி ஒன்றிய கழக செயலாளர் நிலாபுரம் செல்வம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் ஆர் பி கந்தசாமி ஆகியோர் இன்று காலை செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி அருகே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தினர். அப்போது பொதுமக்களிடம் பேசிய பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அதிமுக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப், அம்மா ஸ்கூட்டர், தாலிக்கு தங்கம் ஆகிய திட்டங்களை திமுகவிற்கு நிறுத்திவிட்டதாக கூறி பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு அதிக அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.