ஆரணி தொகுதி திமுக வேட்பாளருக்கு எம்எல்ஏ வாழ்த்து
ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளரை எம்எல்ஏ மு.பெ.கிரிசந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-22 16:38 GMT
ஆரணி திமுக வேட்பாளர்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் திமுக மாவட்ட .எம்.எஸ்.தரணிவேந்தனை அவர்களை ஆரணி திமுக தேர்தல் அலுவலகத்தில் மாவட்ட துணைச் செயலாளரும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி.MLA அவர்கள் கழக வேட்டி அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் பன்னீர்செல்வம், இரமேஷ், சேமன், செந்தில்குமார், ஏழுமலை, மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பொன்தனுசு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.