தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு எம்எல்ஏ ஆறுதல் !
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தேவையான உதவிகளை அரசு மூலம் செய்து தருவதாக உறுதியளித்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-04 09:21 GMT
நா.அசோக்குமார்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட கூப்புளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையன். இவரது கூரை வீடு செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். தகவல் அறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டார். இதில், குடிசை வீடு சேதம் அடைந்தது. இந்நிலையில் புதன்கிழமை மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தேவையான உதவிகளை அரசு மூலம் செய்து தருவதாக உறுதியளித்தார்.