பென்னாகரம் உண்டு உறைவிட பள்ளியில் எம்.எல்.ஏ ஆய்வு
பென்னாகரம் அரசு உண்டு உறைவிட பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி ஆய்வு மேற்கொண்டார்;
Update: 2024-02-28 05:51 GMT
எம்.எல்.ஏ ஆய்வு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மற்றும் பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட அரசு உண்டு உறைவிட பள்ளியில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவருமான ஜிகே மணி திடீரென கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது உண்டு உறைவிட பள்ளி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும் அவர்களிடம் அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வுகள் மேற்கொண்ட பின்னர் துறை அதிகாரிகளிடம் ஏதேனும் குறைகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.