அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ

வே.முத்தம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் கோவிந்தசாமி அவர்கள் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி விலை இன்று வழங்கினார்.

Update: 2024-02-07 10:25 GMT
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி, தர்மபுரி ஒன்றியத்துக்குட்பட்ட வே முத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் கோவிந்தசாமி அவர்கள் தலைமை வகித்து சுமார் 60 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பள்ளியின் மேலாண்மை குழு நிர்வாகிகள் உட்பட ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags:    

Similar News