அரசு பள்ளிக்கு புதிய கட்டிடங்களை திறந்து வைத்த எம்எல்ஏ
பொய்யப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம், மற்றும் சத்துணவு கூடத்தை அரூர் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
Update: 2024-03-15 06:21 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொய்யப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டிடம் 45 இலட்சம் ரூபாய் மதிப்பிலும், மற்றும் சத்துணவு கூடம் 7 இலட்சம் ரூபாய் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்களை இன்று அரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சம்பத்குமார் அவர்கள் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அதிமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.