ஏமூரில் புதிய நியாய விலை கடை திறந்து வைத்து பொருட்களை வழங்கிய எம்எல்ஏ.
ஏமூரில் எம்எல்ஏ சிவகாமசுந்தரி இன்று புதிய நியாய விலை கடையை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
Update: 2024-02-17 10:36 GMT
கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஏமூர் ஊராட்சியில், புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பின்னர் கடைக்குள் சென்று குத்து விளக்கு ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொது மக்களுக்கு, நியாய விலைக் கடையில் வழங்கப்படும் அரசு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் வசந்தி சரவணன், தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் எம் ஆர் ரகுநாதன், வட்ட வழங்கல் அலுவலர் தமிழ்ச்செல்வி, ஏமூர் ஊராட்சி செயலாளர் சிவசுப்பிரமணி, வார்டு உறுப்பினர் ஆனந்த ஜோதி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய நியாய விலை கடை திறப்பு விழாவை சிறப்பித்தனர்.